

கோவில்பட்டி:
கோவில்பட்டி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே. சீனிவாசன் தலைமையில் கட்சியினர் நேற்று காலையில் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்திலிருந்து இரவு நேரங்களில் பழைய பஸ் நிலையம் செல்வதற்கு இயக்கப்பட்டு வந்த சர்க்குலர் பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. அந்த சர்குலர் பஸ்களை மீண்டும் 24 மணி நேரமும் இயக்க வேண்டும் என்ற கேரிக்கையை வலியுறுத்தி இந்த பேராட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் (பொறுப்பு )செல்வகுமார் மற்றும் அரசு போக்குவரத்து கழகபணிமனை கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் இதே கேரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.