தமிழகத்தில் 1996ம் வருட சூழல் மீண்டும் உருவாகும்; நாஞ்சில் சம்பத் பேச்சு

தமிழகத்தில் 1996ம் வருட சூழல் மீண்டும் உருவாகும் என நாஞ்சில் சம்பத் பேசினார்.
தமிழகத்தில் 1996ம் வருட சூழல் மீண்டும் உருவாகும்; நாஞ்சில் சம்பத் பேச்சு
Published on

தஞ்சை,

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை உள்ளன.

இந்த தேர்தலில் தஞ்சை மக்களவை தெகுதியில் தி.மு.க. வேட்பாளர் பழனி மாணிக்கம் மற்றும் சட்டமன்ற தெகுதியில் தி.மு.க. வேட்பாளர் நீலமேகம் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் இன்று பிரசாரம் மேற்கெண்டார்.

அப்பேது பேசிய அவர், நாளுக்கு நாள் தி.மு.க. கூட்டங்களுக்கு வருகை அதிகரித்துள்ளது. தி.மு.க. கூட்டங்களுக்கு வரும் மக்கள் ஆதரவை பார்க்கும் பேது, தமிழகத்தில் 1996ம் வருட சூழல் மீண்டும் உருவாகும் நிலை உள்ளது என்று பேசினார்.

கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் கருணாநிதி தலைமையிலான கூட்டணி பெருமளவு தொகுதிகளை கைப்பற்றி அ.தி.மு.க.வை வீழ்த்தியதுடன் ஆட்சி அதிகாரத்திற்கும் வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com