புயலின் கண்பகுதி அதிகாலை 3 மணிக்கு கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

புயலின் கண்பகுதி அதிகாலை 3 மணிக்கு கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயலின் கண்பகுதி அதிகாலை 3 மணிக்கு கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Published on

சென்னை,

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் புயலின் கண்பகுதி அதிகாலை 3 மணிக்கு கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச் சந்திரன் கூறியதாவது:-

புயலின் கண்பகுதி அதிகாலை 3 மணிக்கு கரையை கடக்கும். இதனால் சென்னையில் கன முதல் மிக கனமழை தொடரும். சென்னையில் இதுவரை 75 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

நிவர் புயல் கடலூரில் இருந்து கிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கு- தென் கிழக்கே 55 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு -தென் கிழக்கே 130 கிலோமீட்டர் தொலைவிற்கு நிலை கொண்டுள்ளது. நிவர் புயல் இன்னும் 1 மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com