திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் திடீர் மாயம்

வடலூரில், இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமானர்.
திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் திடீர் மாயம்
Published on

கடலூர், 

வடலூர் அருகே உள்ள ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்தவர் 33 வயது வாலிபர். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அந்த வாலிபருக்கும், அவரது மாமா மகளுக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர். இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) திருமணம் நடத்த முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளில் இருகுடும்பத்தினரும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். திருமண அழைப்பிதழ்கள் அனைத்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து முடித்த நிலையில் நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மணமகன், கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள தனது நண்பரிடம் பணம் வாங்கி வருவதாக கூறிச்சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவீட்டாரும் மணமகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் மணமகன் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது உறவினர் வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மாயமான மணமகனை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே மணமகன் மாயமானதால், இன்று நடக்க இருந்த திருமண ஏற்பாடுகளை உறவினர்கள் நிறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com