5 பவுன் நகையை மீட்டு பெண்ணிடம் ஒப்படைத்த போலீசார்

5 பவுன் நகையை மீட்டு பெண்ணிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
5 பவுன் நகையை மீட்டு பெண்ணிடம் ஒப்படைத்த போலீசார்
Published on

தாமரைக்குளம்:

கடலூர் மாவட்டம், இறையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவிதா. இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று சென்னை தாம்பரத்தில் இருந்து அவரது சொந்த ஊரான பெண்ணாடத்திற்கு தனது மகன் மற்றும் மகளுடன் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தார். பெண்ணாடத்தில் ரெயிலில் இருந்து இறங்கியபோது தனது கைப்பையை தவறவிட்டதை அறிந்த கவிதா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது பற்றி அருகில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து அவர்கள், அரியலூர் ரயில்வே பாதுகாப்பு படையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அரியலூர் ரெயில் நிலையத்திற்கு அந்த ரெயில் வந்தபோது, ரெயில்வே பாதுகாப்பு படையினர், கவிதா பயணம் செய்த பெட்டியில் ஏறி பார்த்தனர். அப்போது அங்கிருந்த கவிதாவின் கைப்பையை போலீசார் கைப்பற்றினர். மேலும் இது பற்றி கவிதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அரியலூருக்கு வரவழைக்கப்பட்டார். இதையடுத்து அவரிடம், 5 பவுன் சங்கிலி, கைக்கடிகாரம், அடையாள அட்டை, சாவி, ரூ.2 ஆயிரத்து 500 ஆகியவை இருந்த கைப்பையை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஒப்படைத்தார். ரெயிலில் தவறவிட்ட தனது நகைகள் மற்றும் பணம் மீண்டும் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த கவிதா, ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com