தந்தையை அடித்துக் கொன்ற மகன்கள் - பகீர் பின்னனி

ராசிபுரம் அருகே தந்தையை அடித்துக் கொலை செய்த வழக்கில் 2 மகன்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தந்தையை அடித்துக் கொன்ற மகன்கள் - பகீர் பின்னனி
Published on

ராசிபுரம் அருகே தந்தையை அடித்துக் கொலை செய்த வழக்கில் 2 மகன்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில்,

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 55).விவசாயம் செய்து வருகிறார். தற்போது இவர் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆயில்பட்டியில் ஒருவருடைய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

பாலசுப்பிரமணியனின் மூத்த மகன் பாலமணிகண்டன். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு லட்சண்ய ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.பாலமணிகண்டன் வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு ஊரை சுற்றிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

இதனால் லாவண்யா கோபித்துக்கொண்டு திருப்பூர் சென்று அங்கு ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் லாவண்யா தனது மாமனார் வீட்டில் இருந்து குழந்தையை எடுத்துச் சென்றுவிட்டார். இதை அறிந்த பாலமணிகண்டன் தனது மனைவி குழந்தையை எடுத்துச் சென்றதற்கு காரணம் தந்தை பாலசுப்பிரமணியன் தான் என்று நினைத்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த பாலமணிகண்டன், தம்பி பரணிகுமார், உறவினர் சீனிவாசன் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஆயில்பட்டியிலுள்ள தந்தை பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரை 3 பேரும் கட்டையால் அடித்து தாக்கியுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமணிகண்டன், பரணிகுமார், சீனிவாசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com