ஐகோர்ட்டு உத்தரவுப்படி கோவில் நிலங்களை அளவீடு செய்து கணினியில் பதிவேற்ற வேண்டும்

ஐகோர்ட்டு உத்தரவுப்படி கோவில் நிலங்களை அளவீடு செய்து கணினியில் பதிவேற்ற வேண்டும் இந்து அறநிலையத்துறை ஆணையர் அறிவுறுத்தல்.
ஐகோர்ட்டு உத்தரவுப்படி கோவில் நிலங்களை அளவீடு செய்து கணினியில் பதிவேற்ற வேண்டும்
Published on

சென்னை,

இந்து அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் அனைத்து இணை ஆணையர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அற நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களைப் பாதுகாப்பது குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி 12.2.2018 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி அனைத்து கோவில்களிலும் கண்டறியும் குழு மற்றும் பரிசீலனைக்குழு அமைக்கப்பட்டு நிலங்கள் அளவீடு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.

ஜி.ஐ.எஸ். எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கோவில் நிலங்களை கண்டறியும் பணியை மேற்கொள்ள 17.6.2021 அன்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, நில அளவீடு பணியை விரைவில் முடிக்க ஏதுவாக அங்கீகரிக்கப்பட்ட நில அளவர்கள் மண்டலந்தோறும் அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.

கோவில் நில ஆவணங்களை நில அளவர்களிடம் அளிக்கும் வகையில் அவற்றை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். நில அளவை பணிகளை முடித்து அதுதொடர்பான விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com