லாரி கவிழ்ந்து தொழிலாளி படுகாயம்

கருங்கல் அருகே லாரி கவிழ்ந்து தொழிலாளி படுகாயம்
லாரி கவிழ்ந்து தொழிலாளி படுகாயம்
Published on

கருங்கல், 

நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் பகுதியில் இருந்து சிமெண்டு கற்கள் ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று கருங்கல் வழியாக தொலையாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பாலூர் குளத்தின் கரையில் உள்ள அபாயகரமான வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் சிமெண்டு கற்கள் சாலையில் சிதறின. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் அஜய் (வயது 20) ஆகிய இருவரும் லாரியில் இருந்து குதித்து தப்பினர். தொழிலாளி முத்துராஜ் (52) என்பவர் மட்டும் லாரிக்குள் சிக்கிக் கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த குளச்சல் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் கிரேன் வாகனம் மூலம் லாரியை மீட்கும் பணி நடந்தது. முத்துராஜை மீட்ட தீயணைப்பு படையினர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கருங்கல்-புதுக்கடை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com