

சென்னை,
சென்னை, கிண்டி கவர்னர் மாளிகை அருகே விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு நிலவியது. இதனைத்தொடந்து மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் வானிலை ஆய்வுக்காக பயன்படுத்தபடும் பலூன் என தகவல் தெரியவந்துள்ளது. வானிலை ஆராய்ச்சிக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் பறக்கவிடப்படும் பலூன் செயலிழந்து கவர்னர் மாளிகையில் விழுந்ததாக கூறப்படுகிறது.