சுயநலத்திற்காக அதிமுகவை கூறுபோட நினைக்கிறார்கள் - சசிகலா

சுயநலத்திற்காக அதிமுகவை கூறுபோட நினைக்கிறார்கள் என சசிகலா தெரிவித்துள்ளார்.
சுயநலத்திற்காக அதிமுகவை கூறுபோட நினைக்கிறார்கள் - சசிகலா
Published on

திருச்சிற்றம்பலம்,

விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதிகளில் சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொண்டர்களை சந்தித்த சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் திருச்சிற்றம்பலம் மூன்று முனை சந்திப்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது.

அப்போது தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது,

பல அடக்குமுறைகள் இருந்த போதும் அம்மாவும் நானும் சேர்ந்து கழகத்தை கட்டி காத்துள்ளோம். அம்மாவிடம் இருந்த என் நட்பு புனிதமானது. அம்மா என் மீது வைத்திருந்த அன்பு இந்த உலகத்தில் உள்ள யாரும் வைத்திருக்க முடியாது. என்னை அம்மாவிடம் இருந்து பிரிக்க நிறையபேர் சூழ்ச்சிகளை செய்தார்கள்.

அதையெல்லாம் முறியடித்து சாதனை படைத்தது தொடர் வெற்றிகளை கண்ட கழகம் இன்று தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுபோன்ற நிகழ்வு களைய வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். எந்த திமுக கட்சிக்கு எதிராக நம் எம்ஜிஆர் கட்சி ஆரமித்தார்கலோ, அந்த திமுக ஆட்சியை கூட எதிர்க்க ஆளிலை.

சுயநலத்திற்காக சிலர் கட்சியை கூறுபோட நினைக்கிறார்கள். இது தொண்டர்கள் மத்தியில் வெறுப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 13 மாதங்கள் ஆகிவிட்டது. அவர்களின் அட்டுழுழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் அறிவிக்கப்படாத மின் வெட்டு அதிகரித்து வருகிறது. இந்த ஆட்சியாளர்களை பற்றி தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். அடுத்து விரைவில் அமைய போவது நமது கழக ஆட்சி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com