வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை

சுங்குவார் சத்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்துசென்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த எச்சூர் கிராமம் மேட்டு தெருவில் வசித்து வருபவர் சுரேஷ். டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி ஆனந்தி. நேற்று காலை சுரேஷ் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். ஆனந்தி வீட்டை பூட்டி விட்டு தேசிய ஊரக வேலைதிட்டப்பணிக்கு சென்றார். வேலை முடித்து ஆனந்தி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 18 பவுன் நகை அரை கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுரேஷ் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து கட்டை பையில் எடுத்து சென்றது தெரியவந்தது.

ஆனந்தி தன்னுடைய கணவருக்கு புதிதாக சரக்கு வாகனம் வாங்க மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி வீட்டில் வைத்து இருந்த பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com