விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் தேவை- அருணா ஜெகதீசன் பேட்டி

கரூர் கூட்ட நெரிசல் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது என்று அருணா ஜெகதீசன் கூறினார்.
விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் தேவை- அருணா ஜெகதீசன் பேட்டி
Published on

கரூ,

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை அருணா ஜெகதீசன் ஆணையம் சார்பில் ஐந்து பேர் கொண்ட குழுவினர், நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இன்று இரண்டாவது நாளாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார். சம்பவ இடத்தில் பொதுமக்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். அவர் சம்பவம் நடந்த இடம், மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரித்தார்.

இதற்கிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் தேவை என அருணா ஜெகதீசன் கூறியுள்ளார். அவர் கூறுகையில், கரூர் கூட்ட நெரிசல் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும், பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பதை அறிய சம்பவ இடத்தில் மீண்டும் ஆய்வு செய்யப்பட உள்ளது. விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க கால தாமதம் ஏற்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com