திருவாரூர் இடைத்தேர்தல்: வேட்பு மனுக்கள் நாளை முதல் பெறப்படும்; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பு மனுக்கள் நாளை முதல் பெறப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவாரூர் இடைத்தேர்தல்: வேட்பு மனுக்கள் நாளை முதல் பெறப்படும்; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Published on

திருவாரூர்,

தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக காலியான திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான தேர்தல் ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை 31 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நாளை முதல் பெறப்படும் என்று மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்பொழுது, திருவாரூரில் 2,58,687 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோன்று, 303 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இடைத்தேர்தலுக்காக 9 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான புகார்களை 18004257035 என்ற எண்ணில் அறிவிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com