நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்

நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம், முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.
நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்
Published on

சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களும், நிபுணர்கள் தரப்பிலும் கோரிக்கை வலுத்து வருகின்றன. இதற்கு மத்தியில், நாளை மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த நிலையில், நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். ஊரடங்கு உத்தரவு, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com