தமிழக பட்ஜெட் : ஜெயலலிதா இல்லம் நினைவில்லமாக மாற்ற ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். #TNBudget2018 #jayalalithaMemorial
தமிழக பட்ஜெட் : ஜெயலலிதா இல்லம் நினைவில்லமாக மாற்ற ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு!
Published on

சென்னை

தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 7 பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ள அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இதுவாகும்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட மேலும் 500 மையங்கள் ஏற்படுத்தப்படும்.

* முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டம் தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டத்துடன் ஒருங்கிணைப்பு.

* இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி ஒதுக்கீடு.

* விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உயிரி இயந்திரவியல் சிறப்பு மையத்துக்கு ரூ.13.12 கோடி ஒதுக்கீடு.

* மீன்வளத்துறைக்கு ரூ.1,016.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* செங்கோட்டை- கொல்லம் இடையில் 45 கி.மீ. சாலையை அகலப்படுத்தும் பணி துவக்கம்.

* ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவினாசி இடையே சாலையை 4 வழி சாலையாக்க திட்டம்.

* கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறுகள் தயாரிக்கும் பணிகள் துவக்கம்.

* நெடுஞ்சாலை துறைக்கு ரூ.11,073.66 கோடி ஒதுக்கீடு.

* உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் அதிகரித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். ஜெயலலிதா, சென்னை, போயஸ் கார்டனில் வசித்து வந்தார்.

இந்த வீடு, அவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது கட்டப்பட்டதாகும். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவர் வசித்து வந்த இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி அதிகாரிகளும் வேதா நிலையத்தில் பல முறை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில், 2018 - 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதற்காக மொத்தம் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com