

சென்னை
பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2018-2019-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அனைத்து திருமண உதவித்திட்டங்களுக்காக ரூ.724 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உழைக்கும் மகளிருக்கான அம்மா இருசக்கர வாகன மானிய நிதியுதவித்
திட்டம் முதல்-அமைச்சர் முன்னிலையில் பிரதமரால் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
இதன்படி ஒரு பயனாளிக்கு இரு சக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதத் தொகை அல்லது அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படுகிறது.
2017-2018-ம் ஆண்டில் ஒரு லட்சம் பயனாளிகள் 5,306 மகளிருக்கு மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2018- 2019-ம் ஆண்டில் எஞ்சியுள்ள பயனாளிகளுடன் கூடுதலாக ஒரு லட்சம் பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்அடைவர். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.