தமிழக பட்ஜெட் : கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 4000 மதிப்பில் அம்மா - தாய் ஊட்டச்சத்து பெட்டகம்

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 4000 மதிப்பில் அம்மா - தாய் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. #TNBudget2018
தமிழக பட்ஜெட் : கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 4000 மதிப்பில் அம்மா - தாய் ஊட்டச்சத்து பெட்டகம்
Published on

சென்னை

தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 7 பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ள அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இதுவாகும்

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* எரிசக்தி துறைக்கு ரூ.13,967.08 கோடி ஒதுக்கீடு

* ரூ. 200 கோடி செலவில் நபார்டு வங்கி உதவியுடன் பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்

* சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் தரும் என நம்புகிறேன்

* 17 மாவட்டங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன

* ரூ.20 கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்படும்

* கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 4000 மதிப்பில் அம்மா - தாய் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்.

* அம்மா தாய் சேய் ஊட்டச்சத்து பெட்டக திட்டத்திற்கு ரூ.1001 கோடி நிதி ஒதுக்கீடு

* ஒரு டன் கரும்புக்கு ரூ.2,750 விவசாயிக்கு அளிக்க முடிவு

* 500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகளுக்கு சாலை வசதிகள்

* 26 மாவட்டங்களில் கிராமப்புற புத்தாக்க திட்டம் : ரூ.920 கோடி ஒதுக்கீடு

* ரூ.12,301 கோடியில் சென்னை சுற்றவட்டச் சாலை திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்

* ரயில்வே பணிகள் திட்டத்திற்கு ரூ. 513.66 கோடியும், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் மானியத்துக்கு ரூ. 87.80 கோடி

* விவசாயம், இதர பயன்பாடுகளுக்கான மின்சார மானியமாக ரூ.7,537.78 கோடி ஒதுக்கீடு

* கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 8,000 கோடிக்கு புதிதாக பயிர்க்கடன்கள் வழங்கப்படும்

* சமூக பாதுகாப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.3881.66 கோடி ஒதுக்கீடு

* ரூ.1,000 கோடியில் 2500 கிலோமீட்டர் ஊரக சாலைகள் அமைக்கப்படும்

* ரூ. 48 கோடியில் மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் தரம் உயர்த்தப்படும்

* எண்ணூர்- தச்சூர், வடக்கு துறைமுக அணுகு சாலையை அமைக்க ரூ.200.60 கோடி ஒதுக்கீடு

* அணைகள் புனரமைப்பு திட்டம் : 23 அணைகளை மேம்படுத்த ரூ.166.08 கோடி

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com