தமிழக அரசின் அம்மா இரு சக்கர வாகன மானிய திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகளுக்கான தகுதிகள்

தமிழக அரசின் அம்மா இரு சக்கர வாகன மானிய திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகளுக்கான தகுதிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். #TwoWheelerScheme #TNGovt #tamilnews
தமிழக அரசின் அம்மா இரு சக்கர வாகன மானிய திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகளுக்கான தகுதிகள்
Published on

சென்னை

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, பெண்களுக்கான இருசக்கர வாகன மானியத் திட்டத்தை அறிவித்தார். தற்போது அவரது பிறந்த நாளான வரும் 24-ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் பெண்களுக்கு முதல் கட்டமாக மானிய ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. மானிய விலையில் ஸ்கூட்டர் பெறுவதற்கு கடந்த 22-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டது.

நேற்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பிக்க பெண்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் சிறப்பு கவுண்டர்களும் திறக்கப்பட்டன. எனினும் பலர் விண்ணப்பங்கள் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, விண்ணப்பிக்க காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை அரசு நீட்டித்துள்ளது. 10-ம் தேதி வரை விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை அரசு நீட்டித்துள்ளது. 10-ம் தேதி வரை விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனப்பணி மற்றும் முறைசாரா பணியில் உள்ள பெண்கள், சொந்த கடைகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் பணிபுரியும் பெண்கள் , பெண் வங்கி வழி நடத்துனர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வருமான தகுதி, ஆண்டு வருமானம் 2,50,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆதரவற்ற பெண்கள் , இளம் விதவைகள், மாற்றுத்திறனாளி மகளிர் , தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மகளிர், திருநங்கைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:

பிறந்த தேதிக்கான சான்றிதழ், இருசக்கர வாகன உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டையின் நகல், 8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சிறப்பு தகுதி பெற விரும்புவோர் அதற்கான சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருசக்கர வாகனத்தின் விலை ஒப்பந்தப்புள்ளி போன்றவற்றை சமர்பிக்க வேண்டும்.

ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில், மனுக்களை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com