

தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜெயசீலன், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராபி சுஜின் ஜோஸ் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக முத்தையாபுரத்துக்கு மதுரை மண்டலத்தில் பணியாற்றி வந்த விஜயகுமாரும், வடபாகம் போலீஸ் நிலையத்துக்கு பிரேமானந்தமும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும் வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சிவராஜா ஆத்தூருக்கும், ஆத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ், வடபாகம் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.