போலீசாருக்கு மலையேற்ற பயிற்சி

போலீசாருக்கு மலையேற்ற பயிற்சி அளிக்கப்பட்டது.
போலீசாருக்கு மலையேற்ற பயிற்சி
Published on

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்ட போலீசாருக்கு வாரந்தோறும் சனிக்கிழமை காலை நடைபயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பணிகளுக்கு இடையில் அவர்களது உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் அளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாருக்கு மலையேற்ற பயிற்சி பெரம்பலூர் அருகே எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த பயிற்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு மலையேற்றத்தில் ஈடுபட்டார். பின்பு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் காகன்னை ஈஸ்வரர் கோவில் மற்றும் அன்னை சித்தர் ராஜகுமார் சுவாமி அதிஷ்டானத்தில் வழிபாடு நடத்தினர். இந்த மலையேற்ற பயிற்சியில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் (தலைமையிடம்), பெரம்பலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி (பயிற்சி), துணை போலீஸ் சூப்பிரண்டு மதுமதி, மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் ஏட்டுகள், ஊர்க்காவல்படையினர் என 200 பேர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com