களியக்காவிளை அருகேசொகுசு காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

களியக்காவிளை அருகே சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
களியக்காவிளை அருகேசொகுசு காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

குமரி மாவட்டம் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரதன் ராஞ்சகுமார் மற்றும் அதிகாரிகள் ஐரேனிபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை கையைக் காட்டி நிறுத்தும் படி அதிகாரிகள் கூறினர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. அதைத்தொடர்ந்து அந்த காரை சுமார் 2 கி.மீ. தூரம் அதிகாரிகள் துரத்தி சென்று காப்பிகாடு பகுதியில் மடக்கி பிடித்தனர். உடனே அதில் இருந்த டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காரை விளவங்கோடு தாசில்தார் அலுவலகத்திலும், ரேஷன் அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. தப்பி ஓடிய டிரைவர் குறித்த விவரம் தெரியவில்லை. அதுபற்றி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com