

சென்னை,
திமுக ஆட்சியின் இந்து அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சேகர்பாபு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன்படி கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருவதுடன் கோவில் நிலங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அத்துடன், கோவில்களில் உள்ள வரவு செலவு கணக்குகளை இணையத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், சென்னையில் அறநிலையத்துறை சார்பில், இந்தாண்டு இறுதிக்குள் இரண்டு புதிய பெண்கள் கலைக் கல்லூரிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டுவார் என்று அவர் தெரிவித்தார்.