

சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து செவ்வாடை பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை மும்முறை வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பிறகு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.