

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா நாகையகோட்டை கிராமத்தில் திருவள்ளுவர் நகரில் மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கேவிலை, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அந்தபகுதி மக்கள், திண்டுக்கல்லில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்கள் ஊரில் உள்ள மாரியம்மன்-காளியம்மன் கோவிலை, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரக்கூடாது என்று வலியுறுத்தி முற்றுகையிட்டனர். மேலும் அதுதொடர்பாக உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.