ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை சீரமைக்கப்படுமா?

ஜல்லி கற்கள் பெயர்ந்து காட்சியளிக்கும் டி.மணல்மேடு ஊராட்சியில் உள்ள ரவணையன் கோட்டகத்திற்கு செல்லும் சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை சீரமைக்கப்படுமா?
Published on

திருக்கடையூர்:

ஜல்லி கற்கள் பெயர்ந்து காட்சியளிக்கும் டி.மணல்மேடு ஊராட்சியில் உள்ள ரவணையன் கோட்டகத்திற்கு செல்லும் சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

மயிலாடுதுறை மாவட்டம் டி.மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட ரவணையன் கோட்டகம் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை உள்ளது. இந்த சாலை இப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், விவசாயிகள், வாகன ஓட்டிகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை மேம்படுத்தப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த தார் சாலை மேம்படுத்த படாததால் தற்போது சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

சீரமைக்க வேண்டும்

இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சாலையில் கற்கள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதால் இருசக்கர வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகின்றன என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் விவசாயிகள் விளை நிலத்திற்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி மாணவர்கள், வயதானவர்கள், பாதசாரிகள், வியாபாரிகள் என இந்த சாலையில் செல்லும் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையை சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com