போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்து ஆபாசமாக பேசிய ஏட்டு பணியிடை நீக்கம்

போலீஸ் ஏட்டு ஒருவர் ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்து ஆபாசமாக பேசிய ஏட்டு பணியிடை நீக்கம்
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பணிபுரிந்து வரும் 2 உயர் போலீஸ் அதிகாரிகள் பற்றி போலீஸ் ஏட்டு ஒருவர் ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இந்த ஆடியோவை பேசி வெளியிட்டது யார்? என ரகசிய விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில் அவர் தேவ கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த ஏட்டு மூர்த்தி என்பது தெரியவந்தது. உடனடியாக அவர் சிவகங்கை ஆயுதப்படை போலீஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையை தொடர்ந்து நேற்று சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் ஏட்டு மூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com