

நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த ரெட்டிவலம் பகுதியில் நெமிலி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில்,
நந்திவேடுதாங்கள் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் சரத்குமார் (வயது 22) என்பதும்,
அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.