சேலம்: யூ டியூப் பார்த்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபர் கைது...!

சேலம் அருகே யூ டியூப் பார்த்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை 24 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சேலம்: யூ டியூப் பார்த்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபர் கைது...!
Published on

சேலம்,

சேலம் அருகே பணத்தின் மீது உள்ள ஆசையால் யூ டியூப் சேனலை பார்த்து ஏடிஎம் - யை உடைக்க முயன்ற வாலிபரை போலீசார் 24 மணி நேரத்தில் பிடித்தனர்.

கொள்ளை முயற்சி

சேலம் மாவட்டம், மல்லூர் அருகே உள்ள நிலவாரப்பட்டி கிராமத்தின் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெடரல் பேங்க் எனப்படும் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே அந்த வங்கியின் சார்பில் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏ.டி,எம் சென்டரில் காவலர்கள் இல்லாததை அறிந்து நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் கடந்த16ம் தேதி இரவு 1 மணியளவில் ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதிலிருந்து அலாரம் அடித்ததால் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அலாரம் மெசெஞ்

இதனிடையே ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க தொடங்கியவுடன் வங்கி மேனஜர் செல்போனிற்கு அலாரம் மெசெஜ் சென்றுள்ளது. இதுகுறித்து அவர் மல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலூம் சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.

யூடியூப் பார்த்து முயற்சி

இந்தநிலையில் பனமரத்துப்பட்டி அருகே உள்ள பெரமனூர் ஊராட்சி மானியகாடு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரது மகன் விஜயகுமார் (வயது 20) என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது,

கைது செய்யப்பட்ட விஜயகுமார் சேலத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறான். இந்நிலையில் பணத்தின் மீது உள்ள ஆசையின் காரணமாக யூடியூபில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து எவ்வாறு கொள்ளையடிப்பது என்பதை பார்த்துள்ளான். அதே முறையில் இந்த ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளான்.

அப்போது அங்கு அலாரம் அடிக்கவே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். ஏடிஎம் சென்டரில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவுகளை கொண்டு விஜயகுமார் கைது செய்யப்பட்டான். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். பணத்தின் மீது கொண்ட ஆசையின் காரணமாக யூடியூபில் பார்த்து ஏடிஎம் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் குற்றவாளி கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com