சோமாலியாவில் கொடூரம்: வெடி குண்டு தாக்குதலில் 276 பேர் பலி, 300 பேர் காயம்

சோமாலியாவில் நடைபெற்ற வெடி குண்டு தாக்குதலில் 276 பேர் பலி, 300 பேர் காயம் அடைந்தனர்.
சோமாலியாவில் கொடூரம்: வெடி குண்டு தாக்குதலில் 276 பேர் பலி, 300 பேர் காயம்
Published on

மோகதிசு,

சோமாலியாவில் சக்தி வாய்ந்த வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 276 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நடைபெற்ற மிகப்பெரும் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். காயம் அடைந்த பலர் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அந்நாட்டு தகவல்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

சோமாலியா நாட்டின் தலைநகரான மொகதிஷுவின் பிரதான பகுதியில் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.அந்த பகுதியில் உள்ள ஹோட்டலின் வாசலில், வெடிபொருட்களோடு வந்த ஒரு லாரி வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர். அல்-ஷபாப் குழு 2007-ல் கிளர்ச்சியை தொடங்கியதில் இருந்து, சோமாலியாவில் நடைபெற்ற மோசமான தாக்குதல் இதுவாகும்.

வெடிகுண்டு தாக்குதலில் இறந்தவர்களுக்கு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அதிபர் முகம்மது அப்துல்லாஹ் "ஃபார்மஜோ" முகம்மது அறிவித்துள்ளார். இந்த தாக்குதலை நடத்தியது யார் என தெளிவாக தெரியவில்லை. அரசுக்கு எதிராக போராடிவரும், அல்-ஷபாப் குழுவின் தொடர் இலக்காக மொகதிஷு இருந்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்பு வைத்துள்ள அல்-ஷபாப் இயக்கம்தான் இந்த மோசமான தாக்குதலுக்கு காரணம் என்று சோமாலிய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com