

கொழும்பு,
இலங்கையின் கொழும்பு நகரில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஞாயிற்று கிழமை தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில், கொழும்பு நகரின் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது அன்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதேபோன்று மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன.
இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர். 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தியதில் ஒரு பெண் உள்பட 9 தற்கொலை படையினர் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.