காங்கோ ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 27 பேர் பலி

காங்கோ நாட்டின் வடக்கே காங்கோ ஆற்றில் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் 27 பேர் பலியாகினர்.
காங்கோ ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 27 பேர் பலி
Published on

பந்தகா,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டின் வடக்கே காங்கோ ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் வர்த்தகர்கள், மாணவர்கள் என 60 பேர் பயணித்துள்ளனர். இந்த நிலையில் அதிக எடையுடன் சென்ற படகு திடீரென கவிழ்ந்து உள்ளது.

இந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி 27 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. சிலர் உயிர் தப்பியுள்ளனர். சிலரது உடல்கள் நீருக்கடியில் உள்ளன. அவற்றை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

அந்நாட்டின் வடமேற்கே மற்றொரு ஆற்றில் கடந்த மே மாதத்தில் நடந்த இதுபோன்ற சம்பவமொன்றில் 50 பேர் பலியாகினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com