

பதக்ஷான்,
ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தான் மாவட்டத்தில் ஹாவ்ஜ் இ ஷா என்ற பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் கிராமவாசிகள் 14 பேர் சிக்கி கொண்டனர். பின்னர் அவர்கள் உயிரிழந்து விட்டனர்.
இதுதவிர 3 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை அரசின் உள்ளூர் செய்தி தொடர்பு அதிகாரி நிக் முகமது நஜாரி உறுதிப்படுத்தி உள்ளார்.
சமீப வாரங்களாக பதக்ஷான் பகுதியில் பனிப்பொழிவுகள் அதிகரித்து காணப்படுகின்றன. மலைப்பிரதேசத்தில் மாவட்ட சாலை ஒன்றில் இந்த பேரிடர் ஏற்பட்டு உள்ளது.
இதனையடுத்து மீட்பு குழு ஒன்றும், உள்ளூர் போலீசாரும் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சம்பவ பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.