

வாஷிங்டன்,
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்து உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் தடுப்பூசி அனுமதி அளிக்கப்பட்டதற்கு பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் அறிவியல் புதுமைக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவது பெருமையளிக்கிறது எனவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.