அமெரிக்க தூதுக்குழு தலாய் லாமா சந்திப்பிற்கு சீனா கண்டனம்

அமெரிக்க நாடாளுமன்ற தூதுக்குழு ஒன்று தலாய் லாமாவை தர்மசாலாவில் சந்தித்து உரையாடியதற்கு சீனா ராஜதந்திர வட்டார அளவில் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதுக்குழு தலாய் லாமா சந்திப்பிற்கு சீனா கண்டனம்
Published on

பீஜிங்

இந்த நடவடிக்கை இதற்கு முன்னர் அமெரிக்கா அளித்திருந்த தலையிடா உறுதிப்பாட்டிற்கு எதிரானது என சீனா கூறியுள்ளது. இதன் மூலம் தவறான சமிக்ஞை ஒன்றை உலகுக்கு காட்டியிருப்பதாகவும் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. சீனா அயலுறவு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், தலாய் லாமா அயல் நாட்டில் ஆன்மிகப் பிரச்சாரம் என்ற பெயரில் பிரிவினைவாதத்தை நீண்ட காலமாக செய்து வருகிறார் என்று கடுமையாக குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற ஜனநாயகக்கட்சியின் தலைவர் நான்சி பெலோசியின் தலைமையின் கீழ் அமெரிக்காவின் பிரதான இருக்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். தலாய்லாமா சுதந்திரம் கோரும் திபெத் குழுவிற்கும் தலைவராக உள்ளார். உடனடியக அமெரிக்கா தனது திபெத் தொடர்பான அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். எனினும் இதுவரை புதிய அமெரிக்க அதிபர் டிரம்ப் தலாய் லாமாவை சந்திக்கவில்லை. ஆனால் சீன அதிபர் ஸீ ஜிங்பிங்கை சந்தித்தார். முன்னாள் அமெரிக்க அதிபர்கள் பலர், பராக் ஒபாமா உட்பட பலர் தலாய்லாமாவை சந்தித்துள்ளனர்.

சமீபத்தில் தலாய் லாமா அருணாச்சலப்பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததோடு சில இடங்களுக்கு சீனப் பெயரையும் இட்டது நினைவிருக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com