வேற்றுகிரகவாசிகள் குறித்து முக்கிய தகவலை கண்டறிந்த ஸ்கை ஐ ; மறைக்கும் சீனா

வேற்றுகிரகவாசிகள் கண்டுபிடிப்பு பற்றிய அறிக்கையையும் இடுகைகளையும் சீன அரசு ஆதரவு பெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நாளிதழ் நீக்கி உள்ளது.
வேற்றுகிரகவாசிகள் குறித்து முக்கிய தகவலை கண்டறிந்த ஸ்கை ஐ ; மறைக்கும் சீனா
Published on

பெய்ஜிங்

சீனாவின் ராட்சத ஸ்கை ஐ தொலைநோக்கி பூமிக்கு அப்பால் வாழும் வேற்றுகிரகவாசிகள் குறித்த தகவல்களை சேகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. கண்டுபிடிப்பு பற்றிய அறிக்கையையும் இடுகைகளையும் சீன அரசு ஆதரவு பெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நாளிதழ் நீக்கி உள்ளது.

சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி டெய்லியின் இணையதளத்தில் இருந்து இந்த அறிக்கை ஏன் அகற்றப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சீனாவின் அதிநவீன, ஸ்கை ஐ எனப்படும் தொலைநோக்கி கருவியில் அண்மையில் பதிவான ரேடியோ அலைகள் ஏலியன்கள் என்றழைக்கப்படும் வேற்று கிரக வாசிகளிடம் இருந்து வந்திருக்கலாம் என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் குய்சோவ் மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி தொலைநோக்கி நிறுவப்பட்டுள்ளது. மிகச்சிறிய ரேடியோ அலைகளைகூட துல்லியமாக பதிவுச்செய்யும் உணர்திறன் கொண்டது இந்த தொலைநோக்கி 1640 அடி உயரம் கொண்டது .

சீனா நிறுவிய உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியான ஸ்கை ஐ முன்பு கண்டறிந்த குறுகிய-பேண்ட் மின்காந்த சமிக்ஞைகளைவிட இந்த அறிகுறிகள் வேறுபட்டவை. அறிவியல் ஆய்வு குழு அவற்றை மேலும் ஆராய்ந்து வருகிறது என குழுவின் தலைவர் ஜாங் டோன்ஜி கூறி உள்ளார்.

இந்த ஸ்கை ஐ தொலை நோக்கி பெய்ஜிங் நார்மல் பல்கலைக்கழகம், சீன அறிவியல் அகாடமியின் தேசிய வானியல் ஆய்வகம் மற்றும் பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றால் நிறுவப்பட்டது.

இருப்பினும் இந்தச் செய்தி சமூக வலைதளமான விபோவில் ஏற்கனவே பிரபலமாகி மற்ற ஊடகங்களால் பிரசுரிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com