கொரோனா வைரஸ் குறித்து முதன் முதலில் எச்சரித்த மருத்துவர் அதே நோய் தொற்றால் மரணம்

சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து முதன் முதலில் எச்சரித்த மருத்துவர் அதே நோய் தொற்றால் மரணம் அடைந்துள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்து முதன் முதலில் எச்சரித்த மருத்துவர் அதே நோய் தொற்றால் மரணம்
Published on

பெய்ஜிங்,

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து முதன் முதலில் எச்சரித்த சீன மருத்துவர், அதே வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார்.

உகானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவரான லி வென்லியாங், கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பாகவே, உகானில் சார்ஸ் போன்ற புதிய வைரஸ் பரவுவதாக தனது நண்பர்களிடமும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து இருந்தார். ஆனால், லீ வென்லியாங்கிற்கு சம்மன் விடுத்த சீன போலீசார், இது போன்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்து இருந்தனர்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் லி வென்லியாங்கும், அதே வைரசால் பாதிக்கப்பட்டார். சீனாவில் இணைய பயன்பாட்டாளர்கள் மத்தியில் கதாநாயகனாக கொண்டாடப்பட்டு வந்த லி வென் லியாங், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக சீன அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com