கொரோனா பாதிப்பு; 1.5 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன: இங்கிலாந்து பிரதமர்

கொரோனா பாதிப்புக்கு 1.5 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன என இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு; 1.5 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன: இங்கிலாந்து பிரதமர்
Published on

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து வந்தது. இதனால் அடுத்த கட்ட ஊரடங்குக்கு அந்நாடு சென்றுள்ளது. இதனை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு டிசம்பர் 8ந்தேதி தடுப்பூசி போடும் பணிகள் நடந்தன.

இதன்படி, உலகிலேயே முதல் நபராக மார்கரெட் கீனன் (வயது 90) என்ற மூதாட்டிக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டன.

இதுபற்றி இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இதுவரை 1.5 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. நாடு முழுவதற்கும் ஆன சாதனையிது. விஞ்ஞானிகள், தொழிற்சாலை பணியாளர்கள், வினியோக பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் இந்த சாதனையை அடைய உதவிய அனைவருக்கும் எனது நன்றிகள் என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com