நிலவில் மோதும் எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்...!

எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட் ஒன்று நிலவில் மோத உள்ளது.
நிலவில் மோதும் எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்...!
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் பிரபல பணக்காரரான எலன் மஸ்கின் விண்வெளி ஆய்வுத் திட்டமான ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஃபால்கன் 9 ராக்கெட் 2015ல் விண்வெளிக்கு அனுப்பபட்டது. வானிலை தொடர்பான ஆய்வுக்காக இந்த ராக்கெட்டில் செயற்கைக்கொள் அனுப்பிவைக்கபட்டது.

அந்த செயற்கைக்கோள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக புவி வட்டப்பாதைக்கு வெளியே நிலைநிறுத்தப்பட்டது. அதன்பின்னர் செயற்கைக்கோளில் இருந்து ராக்கெட் தனியாக பிரிந்து சென்றது.

ராக்கெட் தனது பணியை முடித்த பிறகு பூமியை நோக்கி திரும்புவதற்கு போதுமான எரிபொருள் இல்லாமல் போனதால் விண்வெளியில் கைவிடப்பட்டது.

இதலால், அந்த ராக்கெட் கடந்த 7 ஆண்டுகளாக பூமி, நிலவு மற்றும் சூரியனின் வெவ்வேறு ஈர்ப்பு விசைகளால் ராக்கெட் இழுக்கப்பட்டு விண்வெளியில் முற்றிலும் குழப்பமான பாதையில் ஆபத்தான முறையில் சுற்றி வந்தது.

இந்நிலையில், அந்த ராக்கெட் வரும் மார்ச் 4 ஆம் தேதி நிலவில் மோத உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நான்கு டன் எடையுடைய இந்த ஃபால்கன் 9 ராக்கெட் மணிக்கு 5,000 மைல் வேகத்தில் நிலவின் மேற்பகுதியில் வந்து மோதும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இவ்வளவு வேகத்தில் மோதினாலும் நிலவில் அதன் பாதிப்பு மிக சிறிய அளவிலேயே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் நிலவில் மோதும் பட்சத்தில் நிலவில் மோதும் கட்டுப்பாடற்ற முதல் ராக்கெட் இது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com