

கீவ்,
ரஷியா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் டுவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அதிகரித்துக் கொண்டே போகிறது.
போர் தொடங்குவதற்கு முன்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை டுவிட்டரில் பின் தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக இருந்த நிலையில், கடந்த 4 நாட்களில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனாக உயர்ந்துள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.