வலது சாரி ஒருவரை பிரதமாக்கினார் பிரஞ்சு அதிபர் மெக்ரான்

பல காலமாக இருந்து வரும் வழக்கத்திலிருந்து தனது கட்சியிலிருந்து பிரதமரை நியமிக்காமல் வலதுசாரி ஒருவரை பிரதமராக பிரஞ்சு அதிபர் மெக்ரான் நியமித்துள்ளார்.
வலது சாரி ஒருவரை பிரதமாக்கினார் பிரஞ்சு அதிபர் மெக்ரான்
Published on

பாரிஸ்

எட்வர்ட் பிலிப் எனும் குடியரசுக்கட்சியின் வலதுசாரி ஒருவரை பிரதமராக நியமித்ததன் மூலம் தனது ஓராண்டு கட்சியை வளர்த்தெடுக்க அதிபர் முயல்வதாக தெரிகிறது. மெக்ரான் வழக்கமான வலது - இடது சாரி அரசியலில்லிருந்து விலகி தனது நடுவாந்திர கொள்கையுடைய கட்சியை விரிவுபடுத்தவும், எதிர் வரும் தேர்தல்களில் வெற்றி பெறவும் பாரம்பரியமான வலது-இடது கட்சிகளில் இருந்து முக்கியஸ்தர்களை தனது கட்சிக்கு இழுத்து வருகிறார்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றால் தனது எதிர்கால திட்டங்களான அரசு செலவினங்களைக் குறைத்தல், முதலீடுகளை அதிகரித்தல் அதன் மூலம் வேலை வாய்ப்புகளை பெருக்குதல் ஆகியவற்றை நிறைவேற்ற முனைகிறார். நீண்டகாலமாக இருந்து வரும் பொருளாதார தளர்வுகள், வேலையின்மை ஆகியவற்றை சரிகட்ட முயல்கிறார்.

வலுவான ஐரோப்பாவிற்கு ஜெர்மன், பிரஞ்சு ஒத்துழைப்பு

பதவியேற்ற பிறகு ஜெர்மனிக்கு சென்றுள்ள பிரஞ்சு அதிபர் அங்கு ஜெர்மன் அதிபர் மெர்கலுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். பிரஞ்சு அதிபரின் ஐரோப்பிய பொருளாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளித்தாலும் இது சுதந்திர வர்த்தக கோட்பாடுகளுக்கு எதிராக அமையும் என்கிறார். பிரஞ்சு அதிபர் இனிமேல் தனது நாடு தேவைக்கேற்ப புதிய ஒப்பந்தங்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் கொண்டு வர தடையில்லை என்கிறார். முக்கிய துறைகளில் ஐரோப்பிய நிறுவனங்கள் வேறு கண்டத்து நாடுகளின் வசம் போகக்கூடாது என்பதில் இரு நாட்டுத்தலைவர்களும் ஒரே கருத்துடன் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com