சர்வதேச நிதியத்தின் உயர் பதவியில் இந்திய பெண் நியமனம்

சர்வதேச நிதியத்தின் உயர் பதவியில் இந்திய பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச நிதியத்தின் உயர் பதவியில் இந்திய பெண் நியமனம்
Published on

வாஷிங்டன்,

சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக 3 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் கீதா கோபிநாத். இவர் அமெரிக்கவாழ் இந்திய பெண்மணி ஆவார். அப்பதவியை வகித்த முதலாவது பெண் இவரே ஆவார்.

இந்தநிலையில், சர்வதேச நிதியத்தின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இது, சர்வதேச நிதியத்தில் 2-வது இடத்தில் உள்ள உயர் பதவி ஆகும்.

உலக பொருளாதாரத்துக்கு உதவுவதில் கீதா கோபிநாத்தின் அறிவுபூர்வமான தலைமையை அங்கீகரிக்கும்வகையிலும், பொருளாதார மந்தநிலையில் இருந்து உலகத்தை விடுவிக்க பாடுபட்டதற்காகவும் அவருக்கு இந்த பதவி அளிக்கப்படுவதாக நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com