மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானை ஒரு டிஸ்யூ பேப்பராக பயன்படுத்துகின்றன- இம்ரான்கான் வேதனை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவை புகழ்ந்து பேசியதை கண்டித்துள்ளார் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் மரியம் நவாஸ் செரீப்.
மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானை ஒரு டிஸ்யூ பேப்பராக பயன்படுத்துகின்றன- இம்ரான்கான் வேதனை
Published on

இஸ்லாமாபாத்

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாக நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் இம்ரான்கான் ஏதாவது அதிசயம் நடந்தாலொழிய அவர் ஆட்சி பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு, தான் இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல என்று கூறினார்.

மேலும் அவர் பேசும் போது எந்தவொரு வல்லரசும் இந்தியாவை அதன் நலன்களுக்கு எதிராக எதையும் செய்ய வற்புறுத்த முடியாது. அவர்கள் (இந்தியா) பொருளாதாரத் தடைகளை மீறி ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறார்கள். இந்தியாவுக்கு யாராலும் உத்தரவிட முடியாது.

மக்களின் நலன்களை காரணம் காட்டி ரஷியா உக்ரைன் போரில் இந்தியா எந்த பக்கமும் நிற்காத போதும் எந்த வல்லரசு நாடும் இந்தியாவுக்கு எத்ராக நிற்கவில்லை. நாமும் இந்தியாவும் இணைந்து ந்மது சுதந்திரத்தை பெற்றோம். ஆனால் மேற்கத்திய நாடுகளால் பாகிஸ்தான் ஒரு டிஸ்யூ பேப்பராக பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகிறது. இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் சுயமரியாதையை கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவை புகழ்ந்து பேசியதை கண்டித்துள்ள பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் மரியம் நவாஸ் செரீப், தனக்கு மிகவும் பிடித்திருந்தால் அண்டை நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

மரியம் நவாஸ் செரீப் மேலும் கூறியதாவது:-

இம்ரான்கானுக்கு பைத்தியம் பிடித்துள்ளது. அதிகாரம் போனதை தொடர்ந்து அவருக்கு பத்தியம் பிடித்து உள்ளது. உங்களுக்கு இந்தியாவை மிகவும் பிடித்திருந்தால் அங்கு செல்லுங்கள், பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com