தமிழகத்தைச் சேர்ந்த இளம் தொழிலதிபருக்கு கோல்டன் விசா - அமீரக அரசு கவுரவம்

தமிழகத்தைச் சேர்ந்த இளம் தொழிலதிபருக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கவுரவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த இளம் தொழிலதிபருக்கு கோல்டன் விசா - அமீரக அரசு கவுரவம்
Published on

துபாய்,

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் பகுதியை பூர்வீகமாக கொண்ட அன்வர் சாதக், கடந்த 20 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு சாதாரண கணக்கராக பணியாற்றி வந்த அவர், பின்னர் பல்வேறு நிறுவனங்களை தொடங்கி தற்போது வெற்றிகரமான தொழிலதிபராக திகழ்ந்து வருகிறார்.

அவரது சாதனையை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பிரபலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த இளம் தொழிலதிபருக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com