தடுப்பூசி போடாவிட்டால் பணி நீக்கம்: ஊழியர்களுக்கு கூகுள் எச்சரிக்கை விடுத்ததாக தகவல்

கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடுப்பூசி போடாவிட்டால் பணி நீக்கம்: ஊழியர்களுக்கு கூகுள் எச்சரிக்கை விடுத்ததாக தகவல்
Published on

வாஷிங்டன்,

கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் இன்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மெமோவில்,

ஊழியர்கள் தாங்கள் தடுப்பூசி செலுத்தியதன் விவரம் குறித்த ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்த முடியாத நிலை இருந்தால் அதற்கான மருத்து ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். மத ரீதியிலான விதி விலக்கு கோர விரும்பினால் அதற்கான ஆவணங்களும் காட்டப்பட வேண்டும்.

அப்படி இல்லாத பட்சத்தில், தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்போம். ஜனவரி 18- ஆம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லையெனில், 30 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். அதைத்தொடர்ந்து, சம்பளம் இல்லாத விடுப்பும் தொடர்ந்தும் பணி நீக்கமும் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தொடர்பு கொண்டு கேட்டது. இதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த கூகுள், "தடுப்பூசி செலுத்தக்கூடிய எங்கள் ஊழியர்களுக்கு உதவ முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்களின் தடுப்பூசி கொள்கையிலும் நாங்கள் உறுதியாக நிற்போம் எனத்தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com