

பாக்தாத்,
ஈராக் நாட்டில் பாக்தாத் நகரின் வடக்கே அல் அய்மா பாலம் அமைந்து உள்ளது. புனித யாத்திரை செல்பவர்கள் அதன் வழியே சென்றுள்ளனர். இந்நிலையில், திடீரென பாலம் அருகே இருந்த குப்பை தொட்டியில் கையெறி குண்டு ஒன்று வெடித்தது.
இந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்தனர். இதுபற்றிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எனினும், ஷியா பிரிவு முஸ்லிம்களின் புனித பயணம் பாதிக்கப்படவில்லை என்று பாதுகாப்பு சேவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று புனித யாத்திரை செல்பவர்களை இலக்காக கொண்டு பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் நுண்ணறிவு துறை தெரிவித்து உள்ளது.