ஐஸ்லாந்து அதிபர் தேர்தலில் குட்னிங் ஜோகன்னசன் மீண்டும் வெற்றி

ஐஸ்லாந்து அதிபர் தேர்தலில் குட்னிங் ஜோகன்னசன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
ஐஸ்லாந்து அதிபர் தேர்தலில் குட்னிங் ஜோகன்னசன் மீண்டும் வெற்றி
Published on

ரெய்காவிக்,

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான உயிர்கொல்லி கொரோனா வைரஸ் முதலில் ஐரோப்பிய நாடுகளைதான் குறிவைத்தது.

இத்தாலியில் இந்த வைரஸ் கொத்துக்கொத்தாக உயிர்களைப் பலிவாங்கியது. அதன் பின்னர் மாற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவி ஆட்டிப் படைத்தது.

தற்போதும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் ஒரு கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமாக உள்ளது.

இந்த நிலையில் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் குட்னிங் ஜோகன்னசன் 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து குட்முண்டூர் பிராங்கிளின் ஜான்சன் போட்டியிட்டார்.

கொரோனா பீதிக்கு மத்தியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் அதிபர் குட்னிங் ஜோகன்னசன் 92.9 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குட்முண்டூர் பிராங்கிளின் ஜான்சனுக்கு வெறும் 7.8 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

இந்த அமோக வெற்றி மூலம் குட்னிங் ஜோகன்னசன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐஸ்லாந்தின் அதிபராகியுள்ளார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ஐஸ்லாத்தின் இளம் அதிபர் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com