

டுவிட்டர் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக போலி கணக்குகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏராளமான டுவிட்டர் கணக்குகளை நிறுத்தி வைத்துள்ளது.
டுவிட்டர் நிறுவனம் இந்த காலப்பகுதியில் 7 கோடிக்கும் அதிகமான கணக்குகளை ரத்து செய்து உள்ளது.ஒரு வாரத்தில் மட்டும் 1.3 கோடி கணக்குகளை ரத்து செய்து உள்ளதாக டெக் க்ரஞ்ச் அறிக்கை கூறுகிறது. சந்தேகத்திற்கிடமான கணக்கு அவர்களின் தொலைபேசி எண்ணை கொண்டு சரிபார்க்கும் சோதனைகள்தோல்வியடையும்போது, அந்தக் கணக்கை ட்விட்டர் ரத்து செய்கிறது. பின்னர் அந்த கணக்குகள் சரி என்றால் மீட்டெடுக்கப்படுகின்றன.
ட்விட்டரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு துணைத் தலைவர் டெல் ஹார்வி, தனது டுவிட்டில் டுவிட்டரில் நம்பகமான, பொருத்தமான, உயர் தரமான தகவலை மக்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்துகிறோம் என கூறி இருந்தார்.