ஆஸ்திரேலியாவில் இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற வாலிபருக்கு 44 ஆண்டு சிறை

ஆஸ்திரேலியாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சிட்னி நகரில் உள்ள ஒரு வீதியில் 20 வயதான மெர்ட் நெய் என்கிற வாலிபர் கையில் கத்தியுடன் வலம் வந்தார்.
ஆஸ்திரேலியாவில் இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற வாலிபருக்கு 44 ஆண்டு சிறை
Published on

சிட்னி,

பின்னர் அந்த வாலிபர் திடீரென சாலையோரம் நின்றிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் 24 வயதான இளம்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார். மேலும் 41 வயதான பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய அந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு நியூ சவுத் வேல்ஸ் மாகாண சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

இதில் மெர்ட் நெய் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தொடர்ந்து அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து நீதிபதி நேற்று இந்த வழக்கில் தனது தீர்ப்பை வழங்கினார்.

அதில் மெர்ட் நெய்க்கு 44 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதில் 33 ஆண்டுகளுக்கு மெர்ட் நெய் பரோலில் வர முடியாது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். அதாவது மெர்ட் நெய் தனது 53 வயது வரை அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியாது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com