வங்காளதேச-சீன உறவு குறித்து இந்தியா கவலைக் கொள்ள வேண்டாம் : வங்காளதேச பிரதமர் ஹசினா பேச்சு

வங்காளதேசத்தின் வளர்ச்சிக்காக சீனவுடன் ஏற்பட்டுள்ள உறவு குறித்து இந்தியா கவலை கொள்ள வேண்டாம் என வங்காளதேச பிரதமர் சேய்க் ஹசினா கூறியுள்ளார். #TamilNews
வங்காளதேச-சீன உறவு குறித்து இந்தியா கவலைக் கொள்ள வேண்டாம் : வங்காளதேச பிரதமர் ஹசினா பேச்சு
Published on

டாக்கா ,

வங்காளதேசத்தின் வளர்ச்சிக்காக சீனவுடன் ஏற்பட்டுள்ள உறவு குறித்து இந்தியா கவலை கொள்ள வேண்டாம். பெய்ஜிங் உடனான ஒத்துழைப்பு வங்கதேச நாட்டின் முன்னேற்றத்திற்காக மட்டுமே என வங்காளதேச பிரதமர் சேய்க் ஹசினா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எங்களின் ஒரே நோக்கம் அரசாங்கத்தை முன்னேற்றுவது தான். நாட்டின் வளர்ச்சிக்காக எந்த நாட்டுடனும் ஒத்துழைப்பில் ஈடுபடத் தயாராக இருக்கிறோம்.

ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மக்கள் தொகை மற்றும் பொருளாதார அடிப்படையில் வங்காளதேசம் மிக குறைந்த வளர்ச்சியடைந்த நாடாகவுள்ளது. 2024 ஆம் ஆண்டில் எங்கள் நாடு இத்தகைய நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வளர்ச்சி பெறும். இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் எங்கள் நாட்டிற்கு வந்து உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் இந்தியாவிற்கு உடனான உறவு எங்கள் நாட்டிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் இந்த இரு நாடுகளும் கடலோர மற்றும் எல்லைப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மற்ற நாடுகளுக்கு முன் மாதிரிகளாக திகழ்ந்துள்ளது.

இதனிடையே வங்கதேசத்திற்கு இந்திய எல்லை உட்பட ஆறு ரெயில் திட்டங்களை உருவாக்க சீன அரசு ஒன்பது பில்லியன் டாலரை குறைந்த வட்டியில் கடனாக வழங்க திட்டமிட்டுள்ளது. இந்திய சீன எல்லைப் பிரச்சினை இருந்து வரும் சமயத்தில், வங்காளதேச-சீன உறவை எண்ணி இந்தியா கவலைக் கொள்ள வேண்டாம் என ஹசினா இந்திய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com