

சிங்கப்பூர்,
மெஹ்ரோத்ரா சசி இந்திய வம்சாவளி பெண் ஆவார். இவர் கடந்த 25ந் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சசியின் பணிப்பெண் ஜின் மார் நவே (வயது 23) மீது போலீசாரின் சந்தேகப்பார்வை விழுந்தது.
இதையடுத்து மியான்மரை சேர்ந்த அந்த பணிப்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மேலும் அவரிடம் மன நல சோதனையும் நடத்தப்படுகிறது. அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்து விட்டது.
இவர் மீதான குற்றச்சாட்டு, கோர்ட்டில் நிரூபணமானால் மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த வழக்கின் விசாரணை சிங்கப்பூர் கோர்ட்டில் வரும் 4ந் தேதி நடக்கிறது.